தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் - Asiriyar.Net

Tuesday, April 9, 2019

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம்





தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த, ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும். பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தால், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
சேலத்தில் நேற்று முன்தினம், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்ற, பள்ளி ஆசிரியை, நித்யா, மாரடைப்பால் இறந்தார். அவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post Top Ad