கட்டுரைப் போட்டியில் வென்ற நெல்லை மாணவி நாசா பயணம் - Asiriyar.Net

Saturday, September 15, 2018

கட்டுரைப் போட்டியில் வென்ற நெல்லை மாணவி நாசா பயணம்




திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் அறிவியல் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல தோ்வாகி உள்ளாா்.


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவா் மாணவி வளா்மதி. இவா் கடந்த மாா்ச் மாதம் “ஏ டே இன் ஸ்பேஸ்” (A Day in Space) என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழி அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டாா்.

932 வாா்த்தைகளில் கட்டுரை எழுதிய மாணவி வளா்மதி போட்டியில் வெற்றி பெற்றாா். போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல வளா்மதி தோ்வாகி உள்ளாா். வருகிற நவம்பா் மாதம் வளா்மதி நாசாவிற்கு செல்ல உள்ளாா்.
இந்நிலையில் மாணவி வளா்மதியின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி தலைமை ஆசிரியா் மாணவிக்கு தங்க நகையை பரிசாக வழங்கி பாராட்டு தொிவித்துள்ளாா்.

Post Top Ad