கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு - Asiriyar.Net

Thursday, September 20, 2018

கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு




QR Code முறை தெரியாத ஆசிரியர்கள்
மதுரையில் தொடக்க பள்ளிகளில் 'கியூ.ஆர்.,'
கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.


சி.இ.ஓ., அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 6, 7, 8 ம் வகுப்பு மாணவரின் எழுத்து, வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படை செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது: பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முதலில் ஆசிரியர் பின்பற்றி மாணவருக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். நான்கு மற்றும் 6ம் வகுப்பு மாணவரின் கல்வித் திறனை அதிகரிக்க அடிக்கடி தேர்வு நடத்தி கண்காணிக்க வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர்.,கோடு முறையை பயன்படுத்தி பாடங்களை ஆடியோ - வீடியோவாக கற்பிப்பதை சில ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை என தெரிகிறது. இதை ஆசிரியர் பயிற்றுனர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Post Top Ad