தமிழகத்தில் நாளை முதல் மின் தடை??? - Asiriyar.Net

Sunday, September 16, 2018

தமிழகத்தில் நாளை முதல் மின் தடை???




அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,500 மெகா வாட்; கோடை காலத்தில், 4,000 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மே முதல், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது. இதனால், அனல் மின் உற்பத்தியை, மின் வாரியம் குறைத்தது. இம்மாத இறுதியில், காற்றாலை சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது, அவற்றில் இருந்து, 300 - 400 மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது.

Post Top Ad