தொப்பை அதிகரித்து விட்டதே என பலரும் கவலைபடுவதுண்டு. குறிப்பாக பெண்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். தொப்பையை குறைக்க ஜிம் செல்வது தான் வழி என நினைத்து பல பெண்கள் ஜிம்மிற்கு செல்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
1.நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்
நமது உடலில் உள்ள கொழுப்பு செல்கள் தொடர்பில் கவனம் செலுத்த உடலுக்கு போதிய கால அவகாசம் தேவை. அதனால் குறைந்தது 7 மணி நேரமாவது நித்திரை கொள்ள வேண்டும்.
2. துரித உணவு வகைகளை தவிர்த்து ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இறைச்சி, தாவரங்கள் மற்றும் சுப் வகைகள் சிறந்தவை
3. திராட்சைப் பழங்கள் மற்றும் வாழைப் பழம் என்பவற்றை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. இவை சத்தான பழங்களாயினும் கொழுப்புச் சத்தும் உள்ளமையால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இவற்றை உட்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது. அல்லது மிகக் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
4.அதிகளவு கலோரிகள் உள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 1600 கலோரிகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல வரவேற்பைப் பெறலாம்.