வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 1, 2018

வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?



இது வருமான வரி தாக்கல் செய்யும் நேரம் என்றாலும் பலர் தனது வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை என்று அதனைப் புறக்கணிப்பது வழக்கம். அதே நேரம் வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் வைத்துள்ள போதிலும் வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டிஸ் அனுப்பும்.

இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் போது அதனை விடக் குறைவாக உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அதனை நிராகரிக்கின்றனர். ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது அது பெரிய அளவில் பயன் அளிக்கும். அது குறித்து விளக்கமாக இங்குத் தளம் அளிக்கும் விவரங்களைப் படித்துப் பயன்பெறுக.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?


இந்தியாவில் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது, இதுவே 60 வயது என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, 80 வயது என்றால் 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி செலுத்துவது அவசியமா?

மக்கள் மனதில் வரி செலுத்த கூடிய அளவிற்கு வருவாய் இல்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. இந்தியாவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யும் போது பின்வரும் நன்மைகளை எல்லாம் பெறலாம்.



டாக்ஸ் ரீஃபண்டு

வங்கி கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு, ஃபிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கும் போது எல்லாம் வங்கி நிறுவனங்கள் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சில நிறுவனங்களில் பணிபுரியும் போது ஊழியர்கள் பெயரில் டிடிஎஸ் பிடித்தம் செய்கின்றன. இது போன்று உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள வரிப் பணத்தினை எல்லாம் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.




  

விசா

வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகக் குடியேற விரும்பும் போது சில நாடுகள் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்கக் கேட்கும். முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் போது விசா பெற வேண்டும் என்றால் வருமான வரி தாக்கல் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதியாகவும் உள்ளது.



கடன்

வீட்டுக் கடன், கார் கடன் அல்லது பிற கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கடந்த இரண்டு வருடங்களுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை வங்கிகள் கட்டாயம் எனக் கூறி வருகிறன. வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற காரணங்களுக்காக எல்லாம் பலரின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்தும் அளவிற்கு வரி வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது பயனை அளிக்கும்.



முன்நோக்கிய மூலதன இழப்புகள்


சொந்தமாகத் தொழில் அல்லது ஈக்விட்டி முதலீடு செய்து வரும் போது கடந்த 8 வருடங்களாக நட்டம் அடைந்து வந்தாலும் வரும் காலத்தில் லாபம் பெற வாய்ப்புள்ளதால் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. அதன் மூலம் அந்த நட்டத்தினை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்ல உதவும்.



பிற வருவாய்கள்

உங்கள் வருவாய் வரி செலுத்தும் அளவிற்கு இல்லை, விவசாயம் மூலம் வரும் வருவாய் என்றாலும் வரி இல்லா பத்திர திட்டங்கள் அல்லது இது போன்ற பிற திட்டங்களில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து வரும் போது வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. இது எந்த வகையில் உங்களுக்கு வந்த வருவாய் வந்தது என காண்பிக்க ஒரு அத்தாட்சியாக இருக்கும்.

Post Top Ad