இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Thursday, August 9, 2018

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, நேற்று விடுமுறை அறிவித்ததால், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில், ஆன்லைனில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, ஒப்புதல் தருவதற்கான அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி இட ஒதுக்கீடு உத்தரவை, இன்று மாலை, 5:00 மணிக்கு, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். 


நான்காம் சுற்று மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பகல், 12:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் சுற்று விருப்ப பதிவு, இன்று பிற்பகல், 2:00 மணிக்கு தான் துவங்கும். ஐந்தாம் சுற்றுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad