போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர் கைது! - Asiriyar.Net

Saturday, August 18, 2018

போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர் கைது!


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த உதவி பேராசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம், பொன்னேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் , முனைவர் பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்பித்து, கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்ததாக எழுந்த புகாரில் இவர் , பீஹார் மாநிலத்தில் உள்ள மகத் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சமர்ப்பித்து, உதவி பேராசிரியர் பணியை பெற்றார்.
மேற்கண்ட முனைவர் பட்டம் பெற்றது தொடர்பாக, கல்லுாரி இயக்ககம் ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக் கழகத்திடம் விளக்கம் பெற்றது. அதில், மகாலிங்கம் சமர்ப்பித்த முனைவர் பட்டம் சான்றிதழ் போலியானது என்பது தெரிந்தது. பொன்னேரி போலீசார் மகாலிங்கத்தை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே கடந்த ஆறுமாதத்திற்கு முன்னர் இக்கல்லூரியில் தமிழ் இளங்கலை பிரிவில்.பார்த்திபன் பேராசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி தரம்பாதிக்காமல் தடுக்க அனைத்து அரசு கல்லூரிகளிலும் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழை முறைப்படி அரசு ஆய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post Top Ad