அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ளஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம் - Asiriyar.Net

Saturday, August 18, 2018

அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ளஎல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம்


விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியது:
அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ள எல்கேஜி, யூகேஜி புதிய வகுப்புகளில் முதல் பாடமாக தமிழ், இரண்டாம் பாடமாக ஆங்கிலம் இருக்கும். பிளஸ் 2 வகுப்புகளில் அடுத்த கல்வி ஆண்டில் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் 12 வகையான புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். அடுத்த வாரம் முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். தேர்வு தாள் திருத்துவதில் முறைகேடு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Post Top Ad