பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று இயங்கும் - Asiriyar.Net

Thursday, August 9, 2018

பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று இயங்கும்


கருணாநிதியின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.கருணாநிதி மறைவுக்காக, தமிழக அரசின் சார்பில், நேற்று ஒரு நாள், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதனால், நேற்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை. இன்று முதல், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 


தமிழக அரசின் சார்பில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால், வரும், 14ம் தேதி வரை, அரசின் சார்பில் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படாது.தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். 

ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கும். சுதந்திர தினமான, வரும், 15ம் தேதி முதல், இயல்பு நிலை திரும்பும். சுதந்திர தின கொண்டாட்டமும் நடத்தப்படும்.

Post Top Ad