நீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்ல... மத்திய அரசு மறுப்பு - Asiriyar.Net

Saturday, August 11, 2018

நீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்ல... மத்திய அரசு மறுப்பு




இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறைநீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார்.
தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 2019 ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை.2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணம் 2019 ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Post Top Ad