BE : பொறியியல் கலந்தாய்வு - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு! - Asiriyar.Net

Sunday, August 26, 2018

BE : பொறியியல் கலந்தாய்வு - அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!




பொறியியல் கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ,சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  பொறியியல் கலந்தாய்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி இருப்பதாவது:

ஒரு சில கல்லூரிகள் மாணவர்களை மூளை சலவை செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதாக புகார் வந்துள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு பிறருடைய உதவியோ,சிபாரிசோ தேவையில்லை.

மதிப்பெண், தரவிரிசைப்படி மாணவர்கள், விருப்பான கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்து கெள்ளலாம். தங்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ்கள், பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். தவறான தகவல் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேரும்படி கட்டாயப்படுத்தினால் அவர்களை குறித்து விசாரணை அலுவலகத்தில் புகார் செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளது. 

Post Top Ad