கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோரிய வழக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காலை 8 மணிக்கு பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்ட சிக்கல் குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் தரப்பினர் வாதிட்டனர்.
கலைஞருக்கு மெரினாவில் இடம் கோரிய வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு குறித்து தமிழக அரசு காலை 8 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட உடன் காலை 8.30 தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.