வாட்ஸ் ஆப்பில் 5 நபர்களுக்கு மேல் பார்வேர்ட் மெசேஜ் அனுப்ப முடியாது - வருகிறது புதிய அப்டேட்! - Asiriyar.Net

Thursday, August 9, 2018

வாட்ஸ் ஆப்பில் 5 நபர்களுக்கு மேல் பார்வேர்ட் மெசேஜ் அனுப்ப முடியாது - வருகிறது புதிய அப்டேட்!வாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யும் வகையில் கட்டுப்பாடு வர இருக்கிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி வர உள்ளது.


வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இதற்காக வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இனி என்ன செய்யும்
இனி வரும் காலங்களில் ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். புகைப்படம் , வீடியோ, எதுவாக இருந்தாலும் ஐந்து முறை மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். ஐந்து முறை பார்வேர்ட் செய்துவிட்டால், அந்த குறிப்பிட்ட மெசேஜில் பார்வேர்ட் செய்யப்படும் வசதி நிறுத்தப்பட்டுவிடும். பல ஆராய்ச்சிகளுக்கு பின் இந்த அல்காரிதமை வாட்ஸ் ஆப் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே வந்த பிரச்சனை
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அப்டேட்டில் பார்வேர்ட் மெசேஜ்களை காட்டிக் கொடுக்கும் வசதி வர இருக்கிறது. நாம் ஏற்கனவே வந்த மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்ட் மெசேஜ் என்ற லேபிள் இருக்கும்.கண்டிப்பாக நாம் பார்வேட் மெசேஜ் அனுப்பினால் பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும்.

எச்சரிக்கை விடுக்க முடியும்
இதில் வாட்ஸ் ஆப் புதிய யோசனை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி வாட்ஸ் ஆப்பில் நமக்கு பொய்யான ஒரு லிங்கோ, இல்லை வைரஸ் நிறைந்த லிங்கோ வந்தால், அதை காட்டிக் கொடுக்கும் வசதியை ஏற்படுத்த இருக்கிறது. அதன்படி ஒரு பொய்யான லிங்கை கிளிக் செய்யும் முன், அது குறித்து ஒரு வார்னிங் தகவலை நமக்கு வாட்ஸ் ஆப் காட்டும். ஆனால் இந்த அப்டேட்டில் இந்த வசதி இடம்பெறவில்லை.

காரணம் என்ன
குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று வாட்ஸ் ஆப் பார்வேர்ட் ஒன்று கடந்த சில மாதங்களாக பரவுகிறது. மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 35 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதை தடுக்க முடியாமல் அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Post Top Ad