அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, December 25, 2021

அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

 
கோவை வெள்ளலூர் அரசு பள்ளி கணினி ஆசிரியருக்கு எதிரான மாணவ, மாணவிகள் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆன்லைன் வகுப்பின்போது ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆபாச புகைப்படம் அனுப்பும்படி வற்புறுத்துவதாகவும் ஆசிரியர் மீது மாணவ, மாணவிகள் புகார் கூறி உள்ளனர். 


ஆசிரியர் செல்போன் வாயிலாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை ஆதாரமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்துகின்றனர்.


மாணவர்களிடம் பள்ளி நிர்வாகமும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி உளள்து. பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறையில் புகார் அளித்தால்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இந்நிலையில் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.Post Top Ad