இணை இயக்குநர் - பள்ளி பார்வை - வகுப்பு வாரியாக ஆய்வு செய்த விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 17, 2021

இணை இயக்குநர் - பள்ளி பார்வை - வகுப்பு வாரியாக ஆய்வு செய்த விவரம்

 






15-12-2021 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ( இந்து ) இணை இயக்குனர் திருமதி. முனைவர் S. சுகன்யா அவர்கள் வருகைதந்து கீழ்க்கண்ட வகையில் பார்வையிட்டார்கள்...


1.மாணவர் பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம் .

2. ஆசிரிய பதிவு வருகை EMIS இல் ஏற்றப்பட்ட விவரம் .

3. நூலகம் - புத்தக எண்ணிக்கை - மாணவர்கள் படித்த பதிவு விவரம் - நூலக பொறுப்பாசிரியர் பணிகள் ஆய்வு .

 4. தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட கல்வி அலுவலர் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் பதிவேட்டில் பதியப்பட்டு ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியரால் தெரிவிக்கப்பட்டதா என ஆய்வு .

5. பள்ளி மேலாண்மைக்குழு வரவு செலவு - கூட்ட பதிவேடு - தீர்மானங்கள் ஆய்வு.

6. பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட பதிவேடு ஆய்வு.

7 . ஆசிரியர் பாடக்குறிப்பு ஆய்வு.

8. பள்ளி தூய்மை ஆய்வு.

9. இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் , தேவையான வகுப்பறைகள் பற்றிய விவரம்.

10. கழிவறை இயலாக் குழந்தைகளுக்கான கழிவறை ஆய்வு.


வகுப்பறையில் - முதல் வகுப்பு


1 .தமிழ் எழுத்துக்கள் கேட்கப்பட்டது .

2. ஆங்கில எழுத்துகள் கேட்கப்பட்டது .

3. ஆங்கில மாதங்கள் கேட்கப்பட்டது .

4. எண்கள் கேட்கப்பட்டது .


 வகுப்பறையில் – இரண்டாம் வகுப்பு


1. தமிழ் , ஆங்கிலச் சொற்கள் வாசிக்கக் கேட்கப்பட்டது .


வகுப்பறையில் - மூன்றாம் வகுப்பு


1. பாடம் நடத்தும்போது TLM பயன்படுத்துதல் ஆய்வு .

2 . ஆயத்த செயல்பாடுகள் ஆய்வு .

3. பாடக்குறிப்பு Steps படி பாடம் நடத்தப்படுகிறதா என ஆய்வு .

4. Achievement Chart உள்ளதா என ஆய்வு .

5. Learning Outcomes - ஆய்வு .

6.Dictation - போடப்பட்டது .

7. வாய்பாடு கேட்கப்பட்டது.


வகுப்பறையில் - நான்காம் வகுப்பு


1 . உயிர்மெய் எழுத்து அறிந்த விவரம் கேட்கப்பட்டது.

2. இந்திய பிரதமர் , தமிழக முதல்வர் , கல்வியமைச்சர் பெயர் கேட்கப்பட்டது

3. Dictation - போடப்பட்டது

4. வாக்கியம் வாசிக்க ,  எழுதக்  கேட்கப்பட்டது


ஒவ்வொரு வகுப்பிலும் 15 முதல் 20 நிமிடங்கள் ஆசிரியரால் பாடம் நடத்துவது கவனிக்கப்பட்டு app இல் ஏற்றப்பட்டது.


 Higher official -ஆய்வுக்காக உள்ள app இல் வரும் கேள்விகளுக்கு Yes or No முறையில் ஆய்வு செய்யப்பட்டது.


இறுதியில் சிறப்பாக இருந்த நடைமுறைகளுக்கு பாராட்டும் , குறைபாடுகளுக்கு தக்க அறிவுரையும் வழங்கப்பட்டது.



Post Top Ad