தமிழக அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று – விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 19, 2021

தமிழக அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று – விடுமுறை அறிவிப்பு!

 


தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியின் அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று:


தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலையின் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதனால் கல்வி நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தமிழகத்தில் குறைந்த பிறகு அரசு பள்ளிகளை திறக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.


இதனால் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ம் தேதி முதலும், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் அரசு முறையான நோய் தடுப்பு வழிமுறைகளை அறிவித்து பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. அவ்வப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை சோதித்த பிறகே பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்நிலையில்,கோவை மாநகரில், பொள்ளாச்சியில் உள்ள சேரிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 3 மாணவிகள் மற்றும் 1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கொரோனா தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளது





Post Top Ad