மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் – அனைத்து வகை HM, BEOகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 30, 2021

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் – அனைத்து வகை HM, BEOகளுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்

 

தற்போது அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளும் நேரடி வகுப்புகளாக செயல்பட்டுவருவதால் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்து கீழ்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது,


- 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணாக்கர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற செய்ய தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அளவில் வேலூர் மாவட்டம் முதல் மூன்று இடங்களில் இடம் பெறும் வகையில் பள்ளி மாணாக்கர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும், நடைபெறவுள்ள திருப்புதல் தேர்விற்கான கால அட்டவணை பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 


அதனுடைய முதல் கட்டமாக வரும் வாரம் முதல் slip testக்கான வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும், இச்சிறுதேர்வுகளில் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளித்தல் வேண்டும், NTSE, NMMS, Trust Exam போன்ற தேர்வுகளில் அனைத்து மாணவர்களை பங்கேற்க செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்கள் தேர்ச்சி அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும், 


மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் அவர்கள் கூட்டத்தில் சிறுபான்மையினர் நல உதவி தொகை (Pre-matric மற்றும் Post-matric scholarship) இம்மாதம் 30.11.2021க்குள் பள்ளிகளில் முடிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது, - ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


பள்ளிகளில் உள்ள கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவேண்டும். மாணாக்கர்களுக்கான நல்ல குடிநீர் வசதி உள்ளதா என உறுதிப்படுத்தப்படவேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினை அணுகி சிறப்பாக செயல்பட தெரிவிக்கப்பட்டது, 


மழைக்காலங்களில் பள்ளிக் கட்டிடங்களில் மேற்கூரைப் பகுதிகளை அவ்வப்போது பார்வையிட்டு தண்ணீர் தேங்காமல், கட்டிடம் பழுதடையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கூரைகள் இல்லாமல் காணப்படும் கட்டிடங்கள் சார்ந்து உடனுக்குடன் முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டும், 


வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மாவட்ட ஆட்சியரால் பார்வையிடும்போது அப்பள்ளியில் அறிவியல் ஆய்வகங்கள் பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. எனவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் உட்பட அனைத்து ஆய்வகங்களும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் சரிசெய்யப்படவேண்டும், மாணாக்கர் நலன் மிகவும் முக்கியம் என கருதி, பள்ளி துவங்கும் முன்பு மாணாக்கர்கள் பள்ளிக்கு வருகை தருவதிலும், பள்ளி வேலை நேரம் முடியும் வரை பள்ளியை விட்டு வெளியில் செல்லாதவாறும், பாதுகாப்பான சூழலில் மாணாக்கர்கள் கல்வி கற்பதிலும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படவேண்டும். மேலும், மாணவ மாணவியர்கள் வழிதவறி போகாதவாறு அவர்களை செம்மைப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும். மாணாக்கர் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதாக காணப்பட்டால் உடனடியாக மாணாக்கர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை நல்வழிப்படுத்தி நெறி தவறாமல் நடக்க ஆசிரியர்கள் வழிவகை செய்ய வேண்டும். மாணாக்கர்களுக்கு ஒழுக்க கல்வி கற்பிக்க கால அட்டவணை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவ மாணவியர்களிடையே குழந்தை திருமணம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். 


அவ்வாறு குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருந்தால் அவற்றை கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால், இந்த கல்வி ஆண்டில் நடத்தப்படவுள்ள அனைத்து பொதுத் தேர்வுகளிலும் மாணவர்கள் நன்மதிப்பெண் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


பள்ளி மாணாக்கர்கள் பள்ளி வளாகத்திலோ அல்லது வேறு எவ்விடத்திலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என கேள்விப்படும் நிலையில் உடனடியாக துறை சார்ந்த ஆய்வு அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது, 


வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் மாணாக்கர்கள் விவரம், ஆசிரியர்கள் விவரம், பள்ளி உட்கட்டமைப்பு விவரங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும், அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளர்ச்சிக்காக முழு நேரமும், முழு மனதுடன் பணியாற்றிட வேண்டும், சமுதாய வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பங்கு மிகவும் உன்னதமானது என வலியுறுத்தினார். ஒவ்வொரு பள்ளியும் சிறந்த பள்ளியாக விளங்க தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க வேண்டும், 

EMIS இணையதளத்தில் மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய பணிகள் 

1 School Infrastructure-பள்ளியின் அமைவிடம், கட்டிடங்கள் போன்ற விவரங்கள்அவ்வப்போது சரிபார்க்க வேண்டும், 

2 Teachers portal - பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் சார்ந்த
விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். 

மேலும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்கள் விடுபடாமல் உள்ளதா என்றும், மாறுதலில் சென்ற ஆசிரியர்கள் விவரம் common poolக்கு சென்றதா என்றும், தங்கள் பள்ளிக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் Portalலில் சேர்க்கப்பட்டுள்ளனரா என ஒவ்வொரு தலைமை ஆசிரியராலும் உறுதி செய்யப்படவேண்டும். 

3. Students Portal - மாணவர்களின் விவரங்கள் தங்கள் பள்ளியின் EMIS
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் சார்ந்த வகுப்பு ஆசிரியரால் மேற்கொள்ளப்படவேண்டும், Common poolலில் தங்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் உள்ளனரா என கண்டறிந்து, தங்கள் பள்ளியின் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி வகுப்பு ஆசிரியரால் மேற்கொள்ளப்படவேண்டும், 

4. வரும் நாட்களில் ஆசிரியர்கள் | மாணவர்கள் சார்ந்த அனைத்து விவரங்களும் EMIS மூலமாக மட்டுமே ஆணையரகத்தால் எடுக்கப்படவுள்ளதால், EMIS இணையதளத்தில் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் | மாணவர்கள் சார்ந்த விவரங்கள் உடனுக்குடன் update செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது, 


5. 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்து வெளியில் செல்லும் மாணவர்களுக்கு EMIS
மூலமாக தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும்,


Click Here To Download - Collector, HM, BEO Meeting Minutes - PdfPost Top Ad