புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, October 6, 2020

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

 

புதுச்சேரியில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கடந்த வாரம் முதல்வர் நாராயணசாமி கூறும்போது, 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இருக்கைகள், மேஜை, பெஞ்சுகளை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்றன. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகிற 8ம் தேதி முதல் பள்ளிகளுக்கு மதியம் 1 மணி வரை வந்து பாடங்கள் தொடர்பான தங்களது சந்தேகங்களுக்கு ஆசிரியர்களிடம் விளக்கம் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad