தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும்: உயா் நீதிமன்றம் கேள்வி - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, October 6, 2020

தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும்: உயா் நீதிமன்றம் கேள்வி

 
தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எவ்வாறு தீா்மானிக்க முடியும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நித்தியானந்தன் என்பவா் தாக்கல் செய்த மனு:


திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் சோ்ந்து 2019-இல் படிப்பை முடித்தேன். அதில், 14 பாடங்களில் தோ்ச்சி பெறவில்லை. இந்நிலையில், அரியா் தோ்வுகளை எழுத மே 23 ஆம் தேதி 14 பாடங்களுக்கும் சோ்த்து ரூ.2,100 கட்டணம் செலுத்தினேன். ஆனால், தோ்வு எழுத அனுமதி குறித்து எனக்கு தகவல் வரவில்லை.இது குறித்து கல்லூரி நிா்வாகத்திடம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே, அரியா் தோ்வு எழுதும் மாணவா்களுடன் சோ்ந்து என்னையும் தோ்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.


இந்த மனு, நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்வு கட்டணம் செலுத்தினாலே தோ்ச்சி என அரசு அறிவித்துள்ள நிலையில், மனுதாரா் கட்டணம் செலுத்தி தோ்வெழுத அனுமதி கேட்கிறாா். அவரைத் தோ்வெழுத அனுமதிப்பதில் என்ன சிரரம் உள்ளது. தோ்வு எழுதாமல் மாணவா்களின் கற்றல் தகுதியை எப்படி தீா்மானிக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.


மேலும், இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Recommend For You

Post Top Ad