ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, October 14, 2020

ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

 

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கை :


1.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று பணியிடை நீக்கம், 17-b குறிப்பானைகளை உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்கிட வேண்டுகிறோம்.


2.2016 தமிழக சட்டம் சட்டமன்ற தேர்தலின் போது அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறிய வாக்குறுதியை 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்3. பள்ளிக் கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக ஒளிவு மறைவு இன்றி நடத்திட வேண்டுகிறோம்


4.ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு கருவூலங்களுக்கு உத்தரவிட வேண்டும்
5. ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 - வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.இந்த அரசாணையால் ஆசிரியப் பணிக்கு படித்து முடித்து,தகுதிபெற்று காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியப்பணியின் கனவை சிதைக்கும் வகையில் உள்ளது.இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.


இவண்

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

Recommend For You

Post Top Ad