2வது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Sunday, October 18, 2020

2வது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்

 

இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் மக்கள் நலத் திட்டப்பணிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,முதல் தேர்வில் தோல்வியுற்று, இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பயற்சி மையம் மூலம் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறை தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்,


தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommend For You

Post Top Ad