மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஆசிரியர்கள் குற்றவாளிகள்தான்: உயர் நீதிமன்றம் - Asiriyar.Net

Post Top Ad


Friday, February 21, 2020

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஆசிரியர்கள் குற்றவாளிகள்தான்: உயர் நீதிமன்றம்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள்தான் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர்களை விடுதலை செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாணவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், ஆசிரியர்கள் குற்றவாளிகளே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர்கள் நாகராஜன், புகழேந்தி ஆகியோருக்கு தண்டனை விவரம் குறித்து பிப்ரவரி 25ம் தேதி அறிவிப்பதாகவும், அன்றைய தினம், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.Recommend For You

Post Top Ad