கொரோனா வைரஸ் பரவியது எப்படி.. விஞ்ஞானிகள் வெளியிட்ட ஷாக் தகவல்கள்!! - Asiriyar.Net

Post Top Ad

Saturday, February 8, 2020

கொரோனா வைரஸ் பரவியது எப்படி.. விஞ்ஞானிகள் வெளியிட்ட ஷாக் தகவல்கள்!!

கொரோனா வைரஸ் வவ்வால் அல்லது பாம்பு மூலமாக பரவியிருக்கலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எறும்பு தின்னி மூலமாக பரவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

சீனாவை மரணப்பிடியில் வைத்திருக்கும் கொரோனா இதுவரை, 20,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 638 பேர் க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் காட்டில் வவ்வால்களை தின்று வாழும் பாம்பை மனிதன் தின்பதால் பரவியதாக சொல்லப்பட்ட நிலையில் எறும்பு தின்னி மூலமாக பரவியிருக்கிறது என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

றும்பு தின்னி செதில்களில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆண்மைக் குறைவு, புற்று நோய் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதாக சீனாவில் நம்பப்படுகிறது.

சீனா மட்டுமலாது மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் எறும்பு தின்னியின் செதில்களுக்கு மவுசு இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சிகளின் படி எறும்பு தின்னியின் செதில்களில் அப்படி எந்த நன்மையையும் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எறும்பு தின்னிகள் சீனா முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தென்சீன வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செதில்களை கொண்ட பாலூட்டியான எறும்பு தின்னி வைரஸ் பரவலுக்கு செயல்பட்டு இருக்கலாம் என அடையாளம் கண்டுள்ளனர். மேலும், விவரங்களை வழங்காமல் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பை அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வருஷம் இறுதியில் உகான் நகரில் ஒரு நேரடி விலங்கு சந்தையில் தோன்றிய புதிய வைரஸ் வவ்வால்களால் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு பரவுவதில் ஒரு இடைநிலை ஹோஸ்ட் ஆக இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

காட்டு விலங்குகளிடமிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்த பின்னர், விஞ்ஞானிகள் எறும்பு தின்னிகளில் காணப்படும் வைரஸ்களின் மரபணு வரிசைமுறைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 99 சதவீதம் ஒத்ததாக இருப்பதை கண்டறிந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உலகத்தில் அதிகமாக கடத்தப்பட்ட விலங்காக எறும்பு தின்னி கருதப்படுகிறது மற்றும் கடந்த பத்தாண்டுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான எறும்பு தின்னிகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டு உள்ளது என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.Recommend For You

Post Top Ad