8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்...? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 24, 2020

8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்...?




பொதுவாக நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும். 8 வடிவ நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது. இதனை திறந்த வெளியில் செய்வது நல்லது. நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, தெற்கிலிருந்து வடக்காகவும் நடக்க வேண்டும்.

ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் என மொத்தமாக 30 நிமிடம் நடை பயிற்சியை மேற்கொள்வது நல்லது. 8 வடிவ நடைபயிற்சியின்போது காலில் செருப்பு போடக்கூடாது. இதனை வெறும் காலில் தான் நடக்கவேண்டும். அவ்வாறு நடக்கும்போது நனது பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உளுறூப்புகள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் விரைவில் குணமடையும். இப்பயிற்சியை செய்யும் போது இருமல் ஏற்பட்டு சளி நன்றாக வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் இப்பயிற்சியை செய்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இந்த நடைபயிற்சியை காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் செய்வதனால் ஒரு வருடத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுபடலாம்.

8 வடிவ நடைபயிற்சி பார்வைத் திறனை மேம்படுத்தும். ஏனென்றால் 8 வடிவ நடைபயிற்சியின் போது நமது கண்கள் அந்த கோடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் கண்களில் உள்ள கருவிழி அனைத்து பக்கமும் அசைந்து பார்ப்பதனால் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறனை அதிகரிக்கும்.

இம்முறையை நாம் பின் தொடர்வதன் மூலம் தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன இருக்கம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தப்பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்புக்கோளாரு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவை குணமடையும்.

இவற்றில் செய்யக்கூடாதவை என்ன தெரியுமா?

சாப்பிட்ட உடனே 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. உணவு சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

அறுவைசிகிச்சை செய்தவர்கள் 6 மாதகாலம் வரை இந்த 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. 6 மாதம் கழித்து டாக்டரின் ஆலோசனை பெற்ற பின்பு இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.


கற்பிணி பெண்கள் 8 வடிவ நடைபயிற்சியை கட்டாயமாக செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 8 வடிவ நடைபயிற்சியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.

Post Top Ad