இடுப்பு, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி... இனி கவலை வேண்டாம்..! - Asiriyar.Net

Post Top Ad


Sunday, October 25, 2020

இடுப்பு, முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி... இனி கவலை வேண்டாம்..!
வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவரும் அதிகம் அவதிப்படும் விஷயங்களில் முக்கியமான ஒன்றுதான் முதுகுவலி.


முதுகுவலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

முதுகுத்தண்டு என்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும்.

இவையனைத்தும் வலியை உண்டாக்க கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை மற்ற உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்.

முதுகுவலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தி வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதிக உடல் எடை இருந்தாலும் முதுகுவலி ஏற்படும். உடல் எடையை குறைத்தால் கூட இடுப்புவலி, முதுகுவலியில் இருந்து விடுதலை பெறலாம்.

இடுப்புவலி, முதுகுவலி அதிகமாக இருந்தால் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

முதுகுவலி இருப்பவர்கள், அதுவும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்காருவதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு இருமுறை ஹாட் வாட்ட‌ர் பேக் ஒத்த‌ட‌ம் கொடுத்தால் 50 சதவிகிதம் வ‌லி குறையும்.

நாற்காலியில் உட்காரும்போது பின்புறமாக ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம். இதனால் வலி குறையும். அதிக முதுகுவலி உள்ளவர்கள் மெத்தையில் படுக்காமல் கீழே படுத்து கொண்டால் ஓரளவிற்கு முதுகுவலி கட்டுப்படும்.

Recommend For You

Post Top Ad