அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 28, 2018

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: அடுத்த வாரம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன்


தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என சென்னை எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் பள்ளி பொன்விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா, ராமாவரத்தில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப நிறுவன அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில்அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்தில் 10 ஆயிரம் மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபாராட்டுக்குரியது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர் களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அடுத்த ஆண்டு 12 வகையான திறன் மேம்பாட்டுப் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். தமி ழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளன.தமிழக மாணவர்களை நீட் நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத் தும் வகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்காக 3,200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். நீட் பயிற்சி மையத் தில் ஐஐடி, ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தலைமை உரையாற்றிய பள்ளி யின் நிறுவனரும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர், ‘‘கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 25 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் தொடங்கப்பட்ட எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் நர்சரி பள்ளிதான் விதையாகி இன்றைக்கு 27 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது” என்று குறிப்பிட் டார். ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் வாழ்த் திப் பேசினார்.விழாவில், பள்ளியின் தாளாளர் ஆர்.சிவகுமார்,முதல்வர் அமல் ராஜ், துணை முதல்வர் லட்சுமி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பாலசுப் பிரமணியம், பதிவாளர் சேது ராமன், தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post Top Ad