முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 10, 2018

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!!


பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது
அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர்
அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்
ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad