ஆசிரியர்களுக்கு Tab வழங்குதல் மற்றும் EMIS இல் பதிவு செய்தல் சார்ந்த விவரம். - Asiriyar.Net

Wednesday, July 10, 2024

ஆசிரியர்களுக்கு Tab வழங்குதல் மற்றும் EMIS இல் பதிவு செய்தல் சார்ந்த விவரம்.

 
1)Tab பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கூறப்பட்டது.


2) ஒரு பள்ளியில் 5 tab   கொடுக்கப்பட்டு அந்தப் பள்ளியில் ஐந்தாசிரியர்கள் எனில் மீதம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒன்று என்று மீதம் இல்லாமல் சரியாக இருக்கும் 1.1அதுவே ஒரு பள்ளிக்கு 5 tab வழங்கப்பட்டு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்திருந்தால் மீதமுள்ள இரண்டு டேப்பை அந்த பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும். 


1.2) ஒரு பள்ளிக்கு ஐந்து tab வழங்கிய பின் அப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் எனில் இரண்டு ஆசிரியர்களுக்கான tabயை எந்தப் பள்ளியில் மீதமிருந்து stockல்  வைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பள்ளியில் இருந்து வழங்க கூறப்பட்டது.


2)  தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த tab வழங்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.


3)தலைமையாசிரியர்கள் எந்த serial number உள்ள Tab எந்த ஆசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை EMIS webportalல் உடனடியாக பதிவிடவும்.


3) Tab பெற்ற ஆசிரியர்கள்  அவரது Individual emis loginல் சென்று Tab பெற்ற விவரத்தை Yes/No  என பதிவிட வேண்டும்.


4.இப்பதிவு பெற்று ஒரு வாரம் கழித்து இந்த Tab பயன்படுத்தியதற்கான feedback form (ஏழு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் ) பூர்த்தி செய்ய வேண்டும்.


EMIS website இல் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.


School EMIS login -- school -- Infrastructure -- Tablet tracking -- Enter received count இதில் எத்தனை tablet (Tab) பெறப்பட்டது என்ற எண்ணிக்கை பதிவிட வேண்டும்.


பதிவிட்டவுடன் - Teacher ID choose  பண்ணி இந்த teacherக்கு நேராக எந்த serial number tablet அந்த ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை பதிவிட வேண்டும்.


Post Top Ad