தமிழகத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்நிலையில் திருப்பத்தூர் மடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வந்திருந்த கடலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவி தேர்வு அறையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வந்திருந்த ஒரு மாணவி தேர்வறையில் மயங்கி விழுந்தார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் இருமாணவிகளும் மீண்டும் தேர்வு எழுதினர்.
No comments:
Post a Comment