பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு! - Asiriyar.Net

Saturday, May 7, 2022

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!

 

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.  கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் போதிய பாட திட்டங்களை நடந்த முடியாததால் மாணவர்களுக்கு சில பாடங்களை இந்த ஆண்டு தவிர்த்து குறுகிய பாடங்களை மட்டும் நடத்த அரசு திட்டமிட்டு இருந்தது.  


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் இந்த ஆண்டு நேரடியாக எழுதி வருகின்றனர்.  பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பதை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  


ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


Post Top Ad