அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் 1000 ரூபாய் டெபாசிட் - Asiriyar.Net

Sunday, May 8, 2022

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் 1000 ரூபாய் டெபாசிட்

 
அரசுப் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என தெருமுனைப் பிரசாரம் மூலம் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, சித்துராஜபுரம் ஊராட்சி அய்யனார் காலனியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 


இந்த பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும், ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் டெபாசிட் என்ற திட்டம் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் ஊரில் உள்ள பிள்ளையார் கோயில், காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்றது.


Post Top Ad