தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார் . - Asiriyar.Net

Thursday, May 14, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார் .

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சார்பாக ஆழந்த இரங்கல் தெரிவித்து கொள்ளப்படுகிறது" 




தமிழக முன்னாள் சட்டமேலவை உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளருமான க.மீனாட்சி சுந்தரம் இன்று காலமானார். 

நெஞ்சு வலி காரணமாகத் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை முற்பகல் அவர் காலமானார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறை சேர்ந்த பாவலர் க. மீனாட்சிசுந்தரம் (90) ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், தமிழக மேலவையிலும் திமுக சார்பில் உறுப்பினராக இருந்தார்.

மாரடைப்பு காரணமாகத் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார்.


"அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் சார்பாக ஆழந்த இரங்கல் தெரிவித்து கொள்ளப்படுகிறது"

Post Top Ad