நாளை ( மே 21) ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - CEO Proceedings - Asiriyar.Net

Wednesday, May 20, 2020

நாளை ( மே 21) ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - CEO Proceedings
காணொலிக் காட்சியில் மதிப்புமிகு கல்வித்துறை ஆணையர் அவர்கள் அளிந்த வழிகாட்டுதலில் திருவாரூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை பள்ளிகளின் பணிபுரியும் தலைமை ஆசிரியர் , முதுகலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , சிறப்பாசிரியர்கள் , பிறவகை ஆசிரியர் ஆகியோர் 21.05.2020 வியாழன் அன்று காலை 9.30 மணிக்கு வருகை தரவும் , எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு 21.05.2020 காலை 11 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் ( உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிகுலேசன் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால்,  ஆசிரியர்கள் மே 21 அன்று வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த பின்பும் பழைய செயல்முறைகள் உத்தரவினை சுட்டிக்காட்டி நாளை ( மே 21)  அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Post Top Ad