நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் ! - Video - Asiriyar.Net

Thursday, May 28, 2020

நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் ! - Video




Video
                                          👇👇👇👇👇👇👇👇👇👇👇



அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒய்வு பெறுவதை நினைத்து அமைச்சர் செங்கோட்டையன் தேம்பி அழுத சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததை ஆய்வு செய்வதற்காக வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிக்கேஷன் தயார் செய்யப்பட்டுள்ளது. 


பள்ளியின் ஆய்வுக்கு செல்லும் கல்வி அலுவலர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மட்டுமே ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் ஆய்வு அலுவலர்கள், ஆய்வுகளை முடித்தப்பின் அறிக்கையை மட்டுமே அளிப்பார்கள். இதனால் மாணவர்களின் உண்மை நிலையை உடனே அலுவலர்கள் தெரிந்துக் கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.இந்த நிலையை மாற்றும் வகையில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிக்கேஷன் செயல்பாட்டினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், ''மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அமைச்சர் எடுத்துள்ளார். 

வகுப்பறை நோக்கின் என்ற அப்ளிகேஷன் முக்கிய பங்கினை அளிக்கும். மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். ஏற்கனவே திருவண்ணாமலை, சென்னை மாவட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. தற்பொழுது மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இதன் மூலம் பெற முடியும். கற்றல் அளவு, மாணவர்கள் திறன் உட்பட பல செயல்பாடுகளை அளவிட முடிவதுடன், பொது தகவல்களையும் மாணவர்களுக்கு தர முடியும்'' என்றார்.

அதனைத் தாெடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் பல்வேறு அலுவலர்கள் ஓய்வு பெறுவதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களை விட்டு பிரிவது வேதனையாக இருக்கிறது'' எனப் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.


Post Top Ad