தங்கம் விலை உச்சத்தை தொட்டது - Asiriyar.Net

Wednesday, May 20, 2020

தங்கம் விலை உச்சத்தை தொட்டது




தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
நேற்று முன்தினம் சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 624 ரூபாயாக இருந்தநிலையில் நேற்று 35 ஆயிரத்து 872 ரூபாயாக சரிந்தது. 



இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
நேற்று 4 ஆயிரத்து 484 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 52 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 536 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 416 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 288 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலையும் நேற்று 51 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து 52 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Post Top Ad