தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம் - விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - Asiriyar.Net

Friday, February 21, 2020

தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம் - விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்





வட்டாரக் கல்வி அலுவலர் , குறு வள மைய ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செலுத்துவதால் தொட க்கக் கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது . இதனால் தொடக்க , நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவி
க்கின்றனர் .




தமிழகத்தில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன . கடந்த ஆண்டு கல்வித் துறையில் செய்யப்பட்ட சீர்த்திருத்தத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலகங்கள் கலைக்கப்பட்டன . தொடக்க , நடுநிலைப் பள் ளிகள் மாவட்டக் கல்வி அலு வலகங்களுடன் இணைக்கப்பட் டன . இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன . மேலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் , வட் டாரக் கல்வி அலுவலர் பணி மாற்றுப்பணியாக வட்டாரக் கல்வி அலுவலர் நியமிப்பார் . தற்போது மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . அவரது கட்டுப்பாட்டில் 10 முதல் 13 பள்ளிகளே உள்ளன . தற்போது 10 - க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார் .

இதனால் மாற்றுப் பணி வழங்குவதில் சிக்கல் உள்ளது . இதையடுத்து ஆசிரியர்கள் விடு ப்பு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர் . இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் , ஊதியம் வழங்கும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலரிடமும் , விடுப்பு , மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடமும் வழங்கியது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது . இத னால் பழையபடி வட்டார கல்வி அலுவலரிடமே அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் , என்று கூறினர் .

Post Top Ad