பொதுவாக வாழைப்பழம் எளிமையான விலையில் கிடைக்கும் குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாகும்.
அதிலும் வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான குணங்கள் கிடைக்கின்றது.
வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன . இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கிறது. அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது . அதனால் சோர்வாக இருக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது. வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது.
உறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல. வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது அவசியம் . வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும். உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தினையும் தாண்டி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு அதீத பசி உண்டாகிடும்.
இதனை சரியாக்க நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை உணவாக நீங்கள் இதனை எடுத்து கொள்ளலாம் . அவ்வாறு காலையில் வாழைப்பாம் சாப்பிடுவதால் உங்களது இன்ஸுலின் அளவு கூடிவிடும் . அதோடு பிற உணவுகளையும் நீங்கள் சேர்த்து சாப்பிடும் போது அவை உங்கள் ரத்தச் சர்க்கரையளவினை மிகுதியாக்கும்