பத்திர பதிவு முக்கிய தகவல்..! இடம் ரிஜிஸ்டர் செய்யும் போது.... இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு இருக்கு தெரியுமா..?
கடந்த 2013ம் ஆண்டு முதல் பத்திர பதிவு செய்யும் போது அந்த நிகழ்வுகளை வெப்கேமரா வாயிலாக பதிவு செய்து சிடி- யாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.
தற்போது இதுபோன்று சிடி வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக எல்காட் வாயிலாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா, "பத்திரப்பதிவின் போது ஏற்பாடு செய்யப்படும் வீடியோவை வழங்க 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 100 ரூபாயாக அதனை உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரப்பதிவு என்பது மிக முக்கியமான ஒன்று. முன்பு ஒரு காலத்தில் பத்திரப்பதிவில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டது. ஆள்மாறாட்டம், பத்திரத்தில் குழப்பங்கள் ஏற்படுத்துவது, ஒரே மாதிரியான பத்திரத்தை தயார் படுத்த மற்றவர்களுக்கு விற்பது... இது போன்று பல்வேறு பிரச்சினைகள் நடந்தது. இதில் இருந்து தீர்வு காண்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் ஒரு இடத்தை பதிவு செய்யும்போது அவரது பெயரில் இருந்து வேறு யாருக்கும் மாறாத வாறு, எந்த ஒரு தவறும் நடக்காதவாறு இருப்பதற்காக கடந்த 2013 ஆண்டு முதல் சிடி பதிவு செய்வது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இதற்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.