பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு நாட்குறிப்பின்படி வேலை நாள்கள் விபரம் - Asiriyar.Net

Saturday, February 15, 2020

பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு நாட்குறிப்பின்படி வேலை நாள்கள் விபரம்





பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு  நாட்குறிப்பின்படி  வேலை நாள்கள் விபரம்
------------------------------------------------------
*2019 ஜூன் -19 நாட்கள்.

*ஜூலை         -23 நாட்கள்.

*ஆகஸ்ட்        -21 நாட்கள்.

*செப்டம்பர்   -16 நாட்கள்.

*அக்டோபர்   -22 நாட்கள்.

*நவம்பர்       -21 நாட்கள்.

*டிசம்பர்        -16 நாட்கள்.

*2020ஜனவரி-20 நாட்கள்

*✳ஜூன் 2019 முதல் ஜனவரி 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி மொத்த வேலைநாட்கள்-158 நாட்கள்  பணி செய்திருக்க வேண்டும்.
----------------------------------------------

*20 பிப்ரவரி -22 நாட்கள்*
இதில் 15.02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய இரு சனிக்கிழமைகள் பணிநாட்களில் அடங்கும்.

*2020 மார்ச் -20நாட்கள் .
இம்மாதத்தில் பள்ளிக்கல்வி நாட்குறிப்பில் 25.03.2020 தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை குறிப்பிடவில்லை. இம்மாத வேலைநாட்களிலிருந்து 1 நாளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இம்மாதப்பட்டியலில் விடுமுறை நாட்கள் எதுவுமில்லாத நாட்களான  30.03.2020 திங்கள் மற்றும் 31.03.2020 செவ்வாய்  பணிநாட்கள் விடுபட்டுள்ளது.இவ்விரு நாட்களை பணிநாளாக சேர்த்தால் மொத்தம் 21 பணிநாட்கள் வரும்.இது இம்மாதத்தில் 1 நாள் கூடுதலான பணிநாளாக வரும்.


*2020 ஏப்ரல்-13 நாட்கள்.
இம்மாதத்தில் பட்டியலின்படி 10.04.2020 புனித வெள்ளி விடுமுறை நாளாகும்.
மேலும் இம்மாதத்தில் வரும் விடுமுறை நாட்களான 06.04.2020 (மஹாவீரர் ஜெயந்தி),மற்றும் 14.04.2020 (தமிழ்வருடப் பிறப்பு ஆகிய இரு அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன.

*மேலும் இம்மாதத்தில் பட்டியலின்படி 13 பணிநாட்களில் 2 அரசு விடுமுறை நாட்களைக் கழித்தோமானால் 11 நாட்கள் மட்டுமே பணிநாளாகக் கருத முடியும்.

*2020 பிப்ரவரி முதல் 2020 ஏப்ரல் முடிய (பிப்ரவரி 22+மார்ச் 21+ஏப்ரல் 11) ஆக மொத்தம் 54 நாட்கள் மட்டும் பணிநாள்.

*✳2019 ஜூன் முதல் 2020 ஏப்ரல் முடிய பள்ளிக்கல்வித்துறை நாட்குறிப்பின்படி மொத்த வேலை நாட்கள்.-213 நாட்கள்.*

*✳உள்ளூர் விடுமுறை நாட்கள் -3 நாட்கள் விடப்பட்டதுபோக 210 நாட்கள் 2019-20 கல்வியாண்டில்  பணிசெய்ய வேண்டும்.

*✳2019 ஜூன் முதல் 2020  ஜனவரி வரை நாம் 152 நாட்கள் அல்லது 153 நாட்கள் பணிசெய்து உள்ளோம்.பள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

*✳2019 ஜூன் முதல் ஜனவரி 2020 முடிய 152 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி  54 நாட்கள் பணிசெய்தால் 152 +54=206 நாட்கள் பணிசெய்யவேண்டும். எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில் பட்டியலில் உள்ள 2 சனிக்கிழமை பணிநாள் போக மேலும் 4  சனிக்கிழமைகள் பணிசெய்தால் 210 பணிநாட்கள் நிறைவுபெறும்.

*✳2019. ஜூன் முதல் ஜனவரி 2020 முதல் 153 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி 54 நாட்கள் பணி செய்தால் 153+54=207 நாட்கள் பணி செய்யவேண்டும்.எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில்  2 சனிக்கிழமைகள் பணிநாள் போக மேலும் 3 சனிக்கிழமைகள் பணிசெய்தால்  210 பணி நாட்கள் நிறைவுபெறும்.


*✳2019-2020 கல்வியாண்டில் மாணவர்களின்  இறுதி வேலைநாள் 2020,ஏப்ரல் 20 ஆகும்.

*✳2019-2020 கல்வியாண்டில் ஆசிரியர்களின்  இறுதி வேலைநாள் ஏப்ரல் 30 ஆகும்.

Post Top Ad