கேரளாவில் அரசு பள்ளி ஆசிரியைகள் 2 பேர், சரஸ்வதி ஸ்லோகங்கள் அடங்கிய குறிப்பேடு வழங்கியதால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தின் புறநகரில் அஜிகோட் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கணிதப் பாடங்களை எளிதில் கற்கும் வகையில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரஸ்வதி படத்துடன் கூடிய குறிப்பேடு வழங்கப்பட்டது.
அந்த குறிப்பேட்டில் கணித பிரார்த்தனை மற்றும் சரஸ்வதி ஸ்லோகங்கள் இடம்பெற்றிருந்தன. இது கணிதத்தைக் கற்க உதவும் என்றும் தினசரி பிரார்த்தனை செய்வதற்கான அறிவுறுத்தல்களுடன் விநியோகிக்கப்பட்டது.
இதை கண்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பள்ளியில் புகார் கொடுத்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தகராறில் ஈடுபட்டதால், இது பள்ளிக்கல்வித்துறை கவனத்துக்கு சென்றது. இதைத்தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரி ராஜ்குமார், ஆசிரியர்கள் மதச் சின்னங்களைப் பயன்படுத்தினர் என்பது குற்றச்சாட்டு, என்று அந்த அதிகாரி கூறி சம்பந்தப்பட்ட 2 ஆசிரியைகளையும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.