மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடந்தது. ரயில் தாமதமானதால் கர்நாடகாவைச் சேர்ந்த 500 மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை.
'இந்த மாணவர்களுக்கு, மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும்' என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.