தமிழக அரசுப் பள்ளி மாணவர்ககளுக்கு 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா - Asiriyar.Net

Tuesday, May 7, 2019

தமிழக அரசுப் பள்ளி மாணவர்ககளுக்கு 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா


கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா மேற்கொள்கின்றனர்.தமிழக அரசுபள்ளி மாணவர்களை வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

பள்ளிக்கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதில் ஒன்று தான் வெளிநாடு கல்விச் சுற்றுலா. கலை, அறிவியல், இலக்கியத்தில் சிறந்து விளங்கும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வது தான் இத்திட்டத்தின் நோக்கம்.மாநில அளவில் இதற்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல முடியும்.


அதன் படி தற்போது 25 மாணவர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். 5 நாள் சிங்கப்பூரிலும், 5 நாள் மலேசியாவிலும் அவர்கள் தங்கிதொழிற்சாலைகள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்களைப் பார்வையிடுவதுடன், கல்வி நடைமுறைகளையும் அறிய உள்ளனர்.அந்த மாணவர்களுடன் இரு ஆசிரியர்களும் பயணிக்கின்றனர்.

வெளிநாடு செல்வதை எண்ணி மாணவ மாணவியர் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.அரசுப்பள்ளியில் படிக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் வெளிநாடு செல்வது பெருமை கொள்ளச் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post Top Ad