மாணவர்களை அழைத்து, பேரணி செல்லக் கூடாது - பள்ளி கல்வி துறை தடை - Asiriyar.Net

Thursday, May 16, 2019

மாணவர்களை அழைத்து, பேரணி செல்லக் கூடாது - பள்ளி கல்வி துறை தடை


கோடை வெயிலில், மாணவர்களை அழைத்து, பேரணி செல்லக் கூடாது' என, பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித் துறை இயக்குனர், ஏ.கருப்பசாமி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்த, நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் உள்ள, மழலையர் வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை பணிகளை, விடுமுறையிலேயே முடிக்க வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்,விழிப்புணர்வு பேரணிகளில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, பங்கு பெற செய்யக் கூடாது.இதுதொடர்பான அறிவுரைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad