ஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதி தேர்வு - Asiriyar.Net

Thursday, May 16, 2019

ஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் பணியில் சேரக்கூடியவர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களும்; ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.இந்த தேர்வு, 2010, ஆக., 23 முதல் அமலுக்கு வந்தது. 

தமிழகத்தில், 2011ல் துவங்கி இதுவரை, நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 15 முதல், ஏப்., 12 வரை, 'ஆன்லைன்' வழியே பதிவு செய்யப்பட்டன. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்வு நடக்கும் தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று அறிவித்தது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு, முதல் தாள் தேர்வு, ஜூன், 8ல் நடத்தப் படுகிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையில், ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வு, ஜூன், 9ல் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளும், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

இதன் விபரங்களை, www.trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்ட, நான்கு ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களை தகுதியற்றவர்களாக, சமீபத்தில், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.'அவர்கள், இந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad