இப்படி ஒரு கல்வி அதிகாரியா..? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 24, 2018

இப்படி ஒரு கல்வி அதிகாரியா..?


கல்வி அதிகாரி ஒருவர் தனது சொந்த செலவில் மலைவாழ் மாணவர்களின் பள்ளியை புதுப்பித்துள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தன்னால் முடிந்த அளவில் நிதி திரட்டி உதவி வருகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ளது தரிகேட் பிளாக். மலை சார்ந்த இப்பகுதியில் உள்ள மாணவர்கள் பலரும் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால் அரசுப் பள்ளியின் நிலைமையோ இப்பவோ அப்பவோ என்பதுபோல மேற்கூரை இல்லாமல் மழை தண்ணீர் உட்புகும் நிலையில் இருந்தது. 

இப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற துணை கல்வி அதிகாரியான கீதிகா ஜோஷி, பள்ளியின் அவலநிலையை கண்டும், மாணவர்களின் நலன்களை கருதியும் தனது சொந்த செலவிலேயே பள்ளியை புனரமைத்துள்ளார். மேலும் மாணவர்கள் குளிரில் இருந்து படிப்பது கஷ்டம் என்பதால் மாணவர்களுக்கு ஸ்வட்டரும் வழங்கியுள்ளார்.


இதுகுறித்து ஜோஷி கூறும்போது, “ கடந்த 2015-ஆம் ஆண்டு தரிகேட் பிளாக் பகுதியின் துணை கல்வி அதிகாரியாக பொறுப்பை ஏற்றேன். அதன்பின்தான் மலைவாழ் மாணவர்களின் பள்ளிகளில் ஆய்வும் மேற்கொண்டேன். அப்போதுதான் பள்ளியின் அவல நிலையை என்னால் காண முடிந்தது. மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதும் புரிந்துது. 

மேற்கூரை ஓட்டை என்பதால் மழை நீர் வகுப்பறைக்குள் வரும் நிலை இருந்தது. உடனே என் சொந்த செலவிலேயே மலைவாழ் மாணவர்களின் பள்ளியின் மேற்கூரையை சீரமைத்தேன். பின்னர் பள்ளியின் நிலைமையும் அவ்வளவு அருமையாக இல்லை. எனவே சொந்த செலவிலேயே பள்ளியை புனரமைத்தேன்.


இந்த ஒரு பள்ளியை சீரமைத்தால் போதுமா..? மற்ற மாணவர்கள் கஷ்டப்படுவார்களே என பின்னர் நினைத்தேன். மற்ற பகுதிகளுக்கும் இதனை செய்ய வேண்டும் என எண்ணினேன். அதற்காக ஆசிரியர்களையும் ஊக்குவித்தேன். அதன்மூலம் 2.5 லட்சம் பணம் கிடைத்தது. பின்னர் அதன்மூலம் மற்ற பள்ளிகளுக்கு தேவையானதை செய்தோம்.

’இப்படி எவ்வளவு நாள்தான் உன் சொந்த செலவில் அனைத்தையும் செய்வாய்..?’ என ஐஏஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். இதற்காக எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்களிடமும் உதவி கேட்கலாமே என்றும் அவர் அறிவுரை கூறினார். 


அதன்படியே ‘ரூபந்தரன்’ திட்டம் தொடங்கப்பட்டது. அதற்காக வங்கிக் கணக்கு ஒன்றைய தொடங்கியுள்ளோம். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை செய்து வருகிறோம்” என்றார்.

ஜோஷியின் ரூபந்தரன் திட்டத்திற்காக எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். அதன்மூலம் அல்மோரா மாவட்டதில் உள்ள 14 பள்ளிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. ஜோஷியின் பல்வேறு முயற்சிகள் மூலம் அரசாங்க பள்ளியை நோக்கி படையெடும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

Post Top Ad