விரைவில் லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய் - Asiriyar.Net

Tuesday, September 25, 2018

விரைவில் லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய்


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், லிட்டர் பெட்ரோல் விலை, 90 ரூபாயை தாண்டியதால், விரைவில், தமிழகத்திலும், அதே நிலை ஏற்படலாம் என, தெரிகிறது.


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நம் நாட்டில், பெட்ரோல் மீது, மாநில அரசுகள் விதிக்கும், 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரி,  

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம். அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள, மும்பை, தானே, நவி மும்பையில், லிட்டர் பெட்ரோல் மீது, 39.12 சதவீதமும், மற்ற நகரங்களில், 38.11 சதவீதமும், வாட் வரிவிதிக்கப்படுகிறது. 



டீசல் மீதான வாட் வரி, மும்பை, தானே, நவி மும்பையில், 24.78 சதவீதமும், மற்ற நகரங்களில், 21.89 சதவீதமாகவும் உள்ளது. தமிழகத்தில், பெட்ரோலுக்கு, 32.16 சதவீதம்; டீசலுக்கு, 24.08 சதவீதம், வாட் வரி விதிக்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி வரி உள்ளடக்கிய, லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை, மஹாராஷ்டிரா அரசின் வாட் வரி, 'டீலர் கமிஷன்' சேர்த்து, அம்மாநிலத்தில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 90 ரூபாயை தாண்டி,90.08 ரூபாய்க்கு விற்பனையானது; டீசல், 78.58 ரூபாய் என்றளவில் இருந்தது.தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 85.99 ரூபாய்க்கும், டீசல்,78.26 ரூபாய்க்கும் விற்பனையாகின. தமிழகத்திலும், விரைவில், பெட்ரோல் விலை, 


90 ரூபாயை நெருங்க உள்ளதால், வாகன ஓட்டிகள், கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். 

ரூ.15 உயர்வு! 

தமிழகத்தில், ஜன., 1ல், லிட்டர் பெட்ரோல், 72.53 ரூபாய்க்கும், டீசல், 62.90 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒன்பது மாதங்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 13.46 ரூபாய் உயர்ந்து, 85.99 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல், 15.36 ரூபாய் உயர்ந்து, 78.26 ரூபாயாக உள்ளது

Post Top Ad