தமிழகத்தில் 662 ஆரம்ப பள்ளிகளை மூட அரசு தீவிரம்?? - Asiriyar.Net

Wednesday, September 12, 2018

தமிழகத்தில் 662 ஆரம்ப பள்ளிகளை மூட அரசு தீவிரம்??

மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் முடிவு
Related image


தமிழகத்தில் 662 அரசு ஆரம்பப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 900 தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் 10-க்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் உத்தரவிற்கு பின்னரும் 662 ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. 



இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கை பற்றியும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. மூடப்படும் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

கல்வியை ஊக்குவிப்பதற்காக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad