School Morning Prayer Activities - 15.08.2018 - Asiriyar.Net

Tuesday, August 14, 2018

School Morning Prayer Activities - 15.08.2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

உரை:

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா நன்மைகளையும் கொடுக்கும்.


பழமொழி :

A good face needs no paint

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை.

பொன்மொழி:

உண்மையும், நேர்மையும் கொண்டவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்...!

        -சுபாஷ் சந்திர போஸ்

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.கேரளா மாநில மரம் எது?                       தென்னை மரம்
                            
 2.கேரளா மாநில விலங்கு எது?        இந்திய யானை


நீதிக்கதை :

பெண் குழந்தை தேவதைகள்  தெய்வங்கள் வாழும் வீடு-குட்டி கதை

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது. அவளது அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்….

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.

அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார். யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..

இன்றைய செய்தி துளிகள் :

* நாடு முழுதும் 72-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

* மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டுமெனில் சட்ட நடைமுறையை வகுப்பது அவசியமானது என்று தலைமை தோ்தல் ஆணையா் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளாா்.

* பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவா்கூட சேரவில்லை என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.

* தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளார் தமிழக வீரர் அருண் கார்த்திக்.

* ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடால், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Post Top Ad