EMIS - அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம் :ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு! - Asiriyar.Net

Friday, August 24, 2018

EMIS - அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம் :ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!



தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:இஎம்ஐஎஸ் 18 - 19ம் ஆண்டிற்கான இணையதள பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய பிஇஒக்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் இஎம்ஐஎஸ் மூலம் எடுக்க இருப்பதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad